ஹோட்டல்ல மீட் பண்ண கூப்பிட்டார்.. அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஆவேசமாக பேசிய வரலட்சுமி
மாஸ் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் சரத்குமார். இவரின் மகள் வரலட்சுமியும் ஹீரோயின், வில்லி என வித்தியாசமான கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் "கொன்றால் பாவம்" என்ற திரைப்படம் வெளியானது. இதற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
அட்ஜஸ்ட்மென்ட்
வரலட்சுமி தயக்கம் இல்லாமல் தனது கருத்தை முன்வைப்பவர். சமீபத்தில் இவர் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், "ஒருவர் என்னிடம் ஷோ குறித்து பேச வந்தார், அதுவும் என் வீட்டிற்கு. அப்போது பேசி முடித்த பிறகு, அந்த நபர், மற்ற விஷயத்திற்கு நாம் ஹோட்டலில் மீட் பண்ணலாம் என்று சொன்னார். நான் அவரிடம் இங்கு இருந்து கிளம்புங்கள் என்று சொன்னேன்".
"சினிமாவில் முக்கியமான இடத்தில் என் பெற்றோர்கள் இருக்கும் நிலையில் எனக்கே இது போன்ற விஷயம் நடந்தது என்றால், சாதாரண பெண்களுக்கு எவ்ளோ பிரச்சனைகள் ஏற்படும்" என்று வரலட்சுமி கூறியுள்ளார்.
இரண்டாம் திருமணம் செய்ய போகிறாரா தனுஷ்? வெளியான புதிய தகவல்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
