வாரிசு நடிகர்கள் சம்பள விவரம்: விஜய்க்கு மட்டும் இத்தனை கோடியா?
வாரிசு
விஜய் முதல் முறையாக தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் உடன் கூட்டணி சேர்ந்து இருக்கும் படம் தான் வாரிசு. வரும் ஜனவரி 11ம் தேதி தமிழில் மட்டும் இது ரிலீஸ் ஆகிறது. ஆனால் தெலுங்கில் 14ம் தேதி தான் வெளியாகும் என தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்து இருக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் வாரிசு படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் போட்டிக்கு துணிவு படம் ரிலீஸ் ஆவதால் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் இரண்டு படங்களுக்கும் பாதி பாதி தான் கிடைத்து இருக்கிறது.
சம்பள விவரம்
தற்போது வாரிசு படத்தில் நடித்த நடிகர்கள் சம்பளம் பற்றிய விவரம் வெளிவந்து இருக்கிறது. விஜய்க்கு மட்டுமே 110 கோடி சம்பளம் எனவும், ஹீரோயின் ராஷ்மிகாவுக்கு 4 கோடி தரப்பட்டு இருக்கிறது எனவும் தெரிகிறது.
மேலும் சரத்குமாருக்கு 2 கோடி, பிரகாஷ்ராஜ்க்கு 1.5 கோடி, ஷாமுக்கு 1 கோடி என பல நடிகர்கள் கோடிகளில் தான் சம்பளம் வாங்கி இருக்கிறார்கள்.
அது மட்டுமின்றி யோகி பாபு 35 லட்சம், குஷ்பூ 40 லட்சம், ஜெயசுதாவுக்கு 30 லட்சம் என சில நடிகர்களுக்கு லட்சங்களில் சம்பளம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரச்சிதா போட்ட முதல் பதிவு- என்ன கூறியுள்ளார் பாருங்க

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
