மகேஷ் பாபு போலவே விஜய் ! அப்படியே இருக்கிறதே, வைரலாகி வரும் போட்டோஸ்
வாரிசு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகயிருக்கிறது. மேலும் ரசிகர்கள் அனைவரும் வாரிசு திரைப்படத்தின் அடுத்த அப்டேட்டை தான் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று காலையில் இருந்து வாரிசு திரைப்படத்தின் புத்தம் புதிய புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. செம ஸ்டைலிஷான லுக்கில் விஜய்யின் அந்த புகைப்படங்கள் செம வைரலாகின.
இதற்கிடையே தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் கடைசியாக வெளியான மகரிஷி திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பாபு அணிந்துள்ள உடை மற்றும் காட்சிகள் வாரிசு திரைப்படத்தை போலவே இருப்பதால் இரண்டு திரைப்படத்தை ஒப்பிட்டு வருகின்றனர்.
இதோ அப்படி ரசிகர்களிடையே பரவி வரும் போட்டோஸ்
#Maharshi ரீமேக் ஆஹ் ?#Varisu pic.twitter.com/z6QxBf69Hw
— Jagadish (@scbjagadish) October 26, 2022