வாரிசு- துணிவு
இந்த இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுமே தற்போது பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஆனாலும், எந்த படம் பொங்கல் வின்னர் என்ற விவாதம் இன்றும் நடந்து வருகிறது.
சரி இது ஒரு புறம் இருக்க, இப்படங்களின் மூலம் வந்த லாபம் என்ன என்பதை பார்ப்போம். துணிவு படம் தமிழகத்தில் ரூ 55 கோடி அட்வான்ஸ் முறையில் கொடுக்க ரூ 66 கோடிகள் வரை ஷேர் வந்துள்ளதாம்.‘

இதன் மூலம் துணிவு 11 கோடி லாபம் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ரூ. 72 கோடிக்கு விற்கப்பட்ட வாரிசு ரூ. 67 கோடி வரை ஷேர் வர, ரூ. 5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் துணிவு கூடவே வந்ததால் வாரிசை ரூ. 60 கோடிக்கு தான் விற்றார்கள் என்ற பேச்சும் உள்ளது.
இது உண்மையென்றால் ரூ. 7 கோடி லாபம், வெளிநாடுகளில் ரூ. 35 கோடிக்கு விற்கப்பட்ட வாரிசு ரூ. 35 கோடி ஷேர் வந்து போட்ட பணத்தை எடுத்துள்ளனர்.
மேலும், துணிவு ரூ.16 கோடிக்கு விற்கப்பட்டு ரூ. 26 கோடி வரை ஷேர் வர, ரூ. 10 கோடி வரை வெளிநாட்டில் லாபத்தை பார்த்துள்ளது.
லாபத்தின் அடிப்படையில் பார்த்தால் துணிவே பொங்கல் வின்னர், வசூல் அளவில் பார்த்தால் வாரிசு வின்னர்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் தனது தாயுடன் எடுத்த அழகிய புகைப்படம்- அதிகம் வலம் வரும் ஒரேஒரு போட்டோ