ஒரே தேதியில் வாரிசு மற்றும் துணிவு ! ரசிகர்களிடையே மீண்டும் கிளம்பிய எதிர்பார்ப்பு
விஜய் - அஜித்
தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித்.
இவர்கள் இருவரின் திரைப்படங்கள் பல வருடங்கள் கழித்து ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. அதன்படி வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.

ஆனால் திடீரென துணிவு படக்குழுவும் பொங்கல் பண்டிகையில் இப்படம் வெளியாகும் என அறிவித்தனர். இதற்கிடையே இரண்டு திரைப்படங்கள் ஒரே தேதியில் வெளியாகாமல் வெவ்வேறு தேதியில் வெளியாகும் என சொல்லப்பட்டது.
தற்போது வாரிசு திரைப்படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிடுவதால், துணிவு திரைப்படம் வெளியாகும் அதே 12- ஆம் தேதியில் வெளியிட முடிவெடுத்து இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

40 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி ! யாருக்கு தெரியுமா?