நேரு ஸ்டேடியத்திற்கு வெள்ளை உடையில் வந்த நடிகர் விஜய், வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழா- Live Updates
வாரிசு ஆடியோ வெளியீடு
தமிழ் சினிமா ரசிகர்கள் இன்று கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளார்கள். காரணம் கொரோனாவால் விஜய் படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடக்காமல் இருந்தன.
தற்போது சில வருடங்களுக்கு பிறகு வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது,, ரசிகர்கள் நேரு ஸ்டேடியத்திற்கு படையெடுத்து வருகிறார்கள்.

ரசிகர்கள் பலரும் போஸ்டர்கள், பேனர்கள் என கையில் வைத்துக் கொண்டு தளபதியை காண ஆர்வமாக உள்ளனர்.
இப்படத்தில் நாயகியாக நடிக்கும் ராஷ்மிகா விமான நிலையம் வர அவருக்கு ஏகபோக வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு நடிகர் விஜய் வெள்ளை உடையில் வந்திருப்பதாக தகவல் வந்துள்ளது, ஆனால் புகைப்படம் ஒன்றும் வெளியாகவில்லை.
இயக்குனர் வம்சி, தில் ராஜு, விஜய்யின் அப்பா எஸ்ஏசி மற்றும் அம்மா ஷோபனா அனைவருக்கும் வந்துவிட்டார்கள்.
தில் ராஜு அவர்கள் ஸ்டேரியத்திற்குள் வரும்போது ரசிகர்கள் அனைவரும் நம்பர் 1 நம்பர் 1 என கத்தியுள்ளனர்.