துணிவு படத்தை பின்னுக்கு தள்ளிய வாரிசு.. ஆனாலும் வெற்றிக்கு இத்தனை கோடிகள் தேவை
பாக்ஸ் ஆபிஸ்
கடந்த இரு வாரங்களாக பெரும் அளவில் பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்று வாரிசு வசூல் அதிகமா, இல்லை துணிவு வசூல் அதிகமா என்று தான்.
ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனம் ஈர்த்திருக்கும் இந்த இரு திரைப்படங்களும் தொடர்ந்து தமிழகத்தில் நல்ல வசூலை செய்து வருகிறது.
தமிழ்நாடு வசூல்
இந்நிலையில், வெளிவந்த நாளில் இருந்து வசூலில் துணிவு படத்தை விட குறைவாக வசூல் செய்த வந்த வாரிசு, கடந்த சில நாட்களாக சமமான வசூலை செய்து வந்தது.
ஆனால், தற்போது துணிவு படத்தை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆம், இதுவரை துணிவு திரைப்படம் ரூ. 112 கோடி வசூல் செய்துள்ள நிலையில், வாரிசு திரைப்படம் ரூ. 113 கோடி வசூல் செய்து முன்னேறியுள்ளது.
ஆனாலும், இன்னும் ரூ. 23 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபம் என்று தெரிவிக்கின்றனர்.
தோல்வியை நோக்கி செல்லும் வாரிசு.. விஜய்யின் படத்திற்கு இப்படியொரு நிலமையா