விஜய்யின் வாரிசு திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூலிக்கும்?- கணிக்கப்பட்ட விவரம்
விஜய்யின் வாரிசு
வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் விஜய் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் தான் வாரிசு. ராஷ்மிகா நாயகியாக நடிக்க சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், குஷ்பு என பலர் நடிக்க உருவாகியிருக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
விஜய்க்கு அவர் இசையமைக்கும் முதல் படம் என்பதால் நிறைய உழைப்பை போட்டுள்ளார், அதனை இசை வெளியீட்டு விழாவில் கூட கூறியிருப்பார்.
தற்போது படம் வரும் ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது, புக்கிங்கும் வேகமாக நடந்து வருகிறது.
முதல்நாள் வசூல்
தமிழ்நாட்டில் விஜய்யின் வாரிசு படத்திற்கு துணிவை விட குறைவான திரையரங்குகள் கிடைத்திருக்கிறது என்பது நமக்கே தெரியும். ஆனால் வெளிநாடுகளில் வாரிசு அதிக புக்கிங் ஆகி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
தற்போது வாரிசு படத்திற்கான சில விவரங்களை வைத்து படத்தின் முதல் நாள் வசூல் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் நாளில் படம் ரூ. 25 கோடிக்கு வசூலிக்கும் என கூறப்படுகிறது.
இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்?- குறைந்த வாக்குகள் இவருக்கா?

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
