விஜய்யின் வாரிசு
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களை விஜய் தேர்வு செய்வார் என்று பார்த்தால் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் தெலுங்கு பட இயக்குனரை தேர்வு செய்தார்.
வம்சி அவர்களின் இயக்கத்தில் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு புரொடக்ஷனில் தான் விஜய் வாரிசு என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு பாதி ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடக்கிறது.
படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர்களும் புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

புதிய அப்டேட்
இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக் மட்டும் தான் வெளியாகி இருந்தது, தற்போது இப்பட பாடல் குறித்து ஒரு அப்டேட் வந்துள்ளது. அதுஎன்னவென்றால் ஃபஸ்ட் சிங்கிள் வரும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என தெரிகிறது.
இப்பட இசையமைப்பாளர் தமனும் தனது இன்ஸ்டாவில் தீபாவளி என பதிவு செய்துள்ளார். எனவே ரசிகர்கள் செம குஷியாக முதல் பாடலுக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரின்ஸ் பட விழாவில் பிரேம்ஜியின் கலகலப்பான பேச்சு