வாரிசு
விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பலரும் நடித்திருந்தனர்.
மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றாலும், குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

5 நாட்களில் ரூ. 150 கோடி வசூல் செய்த இப்படக் கடந்த 7 நாட்களில் ரூ. 210 கோடி வசூல் செய்துவிட்டதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பொய் கணக்கா
இந்நிலையில், இதுகுறித்து பிரபல விநியோகஸ்தரும், தமிழக திரையரங்க உரிமையாளர் சங்க தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது : ரூ. 200 கோடி வசூல் செய்ய 200 சதவீதம் வாய்ப்பே இல்லை. சோலோ ரிலீஸ் என்றால் கூட பரவாயில்லை. துணிவு படமும் உடன் வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

ஆகையால் இவர்கள் சொல்லாம் அளவிற்கு வாரிசு படம் வசூல் செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.
முக்கிய இடங்களில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள விஜய்யின் வாரிசு- என்ன இப்படி ஆனது?
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் IBC Tamilnadu
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri