விஜய் படத்தால் நஷ்டத்தை சந்திக்க போகிறாரா தில் ராஜு.. போட்ட பணம் கைக்கு வருமா
வாரிசு
தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் வாரிசு.
வம்சி இயக்கிய இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், ஸ்ரீகாந்த், சரத்குமார், ஜெயசுதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தமிழகத்தில் நல்ல வசூலை குவித்து வருகிறது.
லாபம் கிடைக்குமா
இந்நிலையிலும் வாரிசு படத்திற்கு பெரிய சிக்கல் ஏற்பட்டதுள்ளது. ஆம், வாரிசு திரைப்படம் இதுவரை ரூ. 60 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், வாரிசு திரைப்படம் தமிழகத்தில் ரூ. 72 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில், இன்னும் ரூ. 12 கோடிக்கும் மேல் ஷேர் கிடைத்தால் மட்டுமே வாரிசு படம் லாபமாக அமையும் என்கின்றனர்.
இந்த வாரம் ஷாருக்கான் நடிப்பில் வெளிவரவிருக்கும் பதான் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றால், வாரிசு படத்தின் வசூல் குறையும் என்றும் கூறப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் வரக்கூடிய நாட்களில் வாரிசு படம் தயாரிப்பாளருக்கு லாபமாக அமையுமா? இல்லையா? என்று.
தோல்வியை நோக்கி செல்லும் வாரிசு.. விஜய்யின் படத்திற்கு இப்படியொரு நிலமையா

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

நான் இப்போ 7 மாத கர்ப்பம்; ஆனால், எனக்கு 27 வயதில் பொண்ணு இருக்கா - சீரியல் நடிகை அகிலா IBC Tamilnadu
