பிரம்மாண்ட ஹெலிகாப்டர் உடன் நடந்து வரும் வாரிசு படத்தின் ஷூட்டிங்! மாஸ்ஸான கிளைமாக்ஸ் காட்சி
வாரிசு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் வாரிசு.
ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான அப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்து இருக்கிறது.

மேலும் தற்போது ரசிகர்கள அனைவரும் அப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக காத்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதற்காக ஹெலிகாப்டர் எல்லாம் பயன்படுத்தி விஜய்யின் மாஸ் காட்சி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி தற்போது படபிடிப்பு தளத்தில் பயன்படுத்திய ஹெலிகாப்டர்-ன் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

பிக்பாஸ் விக்ரமன் சன் டிவியின் இந்த தொடரில் நடித்துள்ளாரா?