வாரிசு திரைப்படம் இந்த மொழியில் எடுக்கப்படவில்லை ! வெளியான புதிய அப்டேட்

By Jeeva Aug 01, 2022 07:00 AM GMT
Report

விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் தளபதி விஜய்யுடன் ஏகபட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சரத்குமார் வாரிசு திரைப்படம் குறித்த பல்வேறு முக்கிய தகவல்களை கூறியிருந்தார். இதனால் ரசிகர்களுக்கு வாரிசு படத்தின் மீதான ஆர்வம் அதிகமாகியுள்ளது.

வாரிசு திரைப்படம் இந்த மொழியில் எடுக்கப்படவில்லை ! வெளியான புதிய அப்டேட் | Varisu Movie New Update On Lang

வாரிசு அப்டேட்

அதுமட்டுமின்றி வாரிசு படத்தின் அடுத்தக்கட்ட படபிடிப்பிற்காக நடிகர் விஜய் விசாகபட்டிணம் சென்றிருந்தார். அப்போது அவரை விமான நிலையத்தில் படபிடித்த ரசிகர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு இருந்தனர்.

இந்நிலையில் தற்போது வாரிசு படம் குறித்த முக்கிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், அதன்படி வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் என சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது வாரிசு திரைப்படம் தமிழில் மட்டுமே உருவாகி வருவதாக தெலுங்கு ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும் இப்படத்தின் படபிடிப்பு விசாகபட்டிணம் துறைமுக பகுதியில் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

வாரிசு திரைப்படம் இந்த மொழியில் எடுக்கப்படவில்லை ! வெளியான புதிய அப்டேட் | Varisu Movie New Update On Lang

விமான நிலையத்தில் சாதாரணமாக வரிசையில் நின்றிருந்த தளபதி விஜய்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US