விஜய்யின் வாரிசு ஓவர்சீஸில் அதிக புக்கிங் ஆகிறதா?- துணிவு படத்தை விட அதிகமா?
விஜய்யின் வாரிசு
பொதுவாக தெலுங்கு சினிமா படங்கள் என்றாலே குடும்பம் சென்டிமென்ட் அதிகம் இருக்கும். அதேபோல் விஜய் நடித்துள்ள இந்த வாரிசு திரைப்படமும் குடும்பம் கலந்து சென்டிமென்ட் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
அதற்கு ஏற்றார் போல் இப்படத்தில் ஏகப்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளார். ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் இதில் நான் தான் வில்லன் என கூறியிருந்தார், அதேபோல் ஷ்யாம் பேசும்போது, இப்படம் ஆரம்பிக்கும் போது ரூ. 60 கோடி தான் பட்ஜெட் என கூறப்பட்டது.
ஆனால் படப்பிடிப்பு செல்ல செல்ல படத்தின் பட்ஜெட் ரூ. 80 கோடிக்கு வந்ததாக கூறியிருந்தார்.

ப்ரீ புக்கிங்
தற்போது இப்படத்தின் புக்கிங் வெளிநாடுகளில் படு சூடாக நடந்து வருகிறது. ஓவர்சீஸில் படத்தின் புக்கிங் எப்போதோ தொடங்கிவிட்டது. இதுவரை நடந்த புக்கிங் விவரப்படி படம் ரூ. 1.2 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மணிகண்டா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?