வாரிசு தயாரிப்பாளரின் அடுத்த தமிழ் படம்! ஹீரோ யார் தெரியுமா?
தில் ராஜு
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தை தில் ராஜு தயாரித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு, பல தமிழ் படங்களை தயாரிக்க ஆர்வமாக உள்ளார் என தகவல் வெளிவந்தது. சமீபத்தில் நடந்த வாரிசு ஆடியோ லாஞ்சில் நடிகர் விஜய் தில் ராஜுவை பற்றி பேசினார். "நீங்கள் இங்கு இன்னும் நிறைய படம் எடுத்து சம்பாதிக்க போறீங்க. அதனால் தான் சந்தானம் தில்லுக்கு துட்டு என படம் எடுத்திருக்கிறார்" என காமெடியாக கூறியிருந்தார்.
புதிய கூட்டணி
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை தில் ராஜு தயாரிக்க போவதாக கூறப்படுகிறது. பல முன்னணி ஹீரோக்களை வைத்து ஹிட் படங்கள் கொடுத்த தெலுங்கு இயக்குனர் ஹரி ஷங்கர் இப்படத்தையும் இயக்க உள்ளார்.
மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகிறது. சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்துவருகிறரர். இதையடுத்து ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
5 வயது ஆகும் அசின் மகள்! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க