வாரிசு படத்தின் கதை குறித்து இணையத்தில் வேகமாக பரவும் தகவல் ! ஃப்ரென்ச் படத்தின் காப்பியா ?

By Jeeva Jul 05, 2022 06:11 AM GMT
Report

விஜய்யின் வாரிசு

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார், இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ராதிகா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் அப்படத்தில் தளப்தி விஜய்யுடன் நடித்து வருகிறார்கள், இதனிடையே சமீபத்தில் தான் வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

வாரிசு படத்தின் கதை குறித்து இணையத்தில் வேகமாக பரவும் தகவல் ! ஃப்ரென்ச் படத்தின் காப்பியா ? | Varisu Movie Story Largo Winch Copy

இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆம், அதன்படி ஃப்ரென்ச் திரைப்படமான Largo Winch என்ற படத்தின் ரீமேக்காக வாரிசு திரைப்படம் இருக்கும் என தகவல் பரவி வருகிறது.

Largo Winch

Largo Winch படத்தில் ஒரு கோடீஸ்வரர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். பின் நிறுவனத்தின் உறுப்பினர்கள் ரகசிய மகனைத் தெரிந்துகொள்கிறார்கள், வில்லன் குழுவிற்கும் இது பற்றித் தெரியவருகிறது. இதனால் ஏற்படும் மோதல், திருப்பங்கள் உணர்ச்சிகள் என Largo Winch படம் அமைத்திருக்கும்.

இதனிடையே வாரிசு திரைப்படமும் இதேபோல் அல்லது Largo Winch நாவலை தழுவி இருக்கும் என தகவல் பரவி வருகிறது, ஏற்கனவே இயக்குநர் வம்சி ஒரு ஃப்ரென்ச் திரைப்படத்தை அதிகாரபூர்வமாக ரீமேக் செய்து தோழா என்ற படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இதே கதைகளத்தில் தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் Agnyaathavaasi என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. இது குறித்து தற்போது இணையத்தள வாசிகள் பேசி வருகின்றனர்.   

வாரிசு படத்தின் கதை குறித்து இணையத்தில் வேகமாக பரவும் தகவல் ! ஃப்ரென்ச் படத்தின் காப்பியா ? | Varisu Movie Story Largo Winch Copy

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் இருந்து பகத் பாசில் வெளியேறினாரா?- ரசிகர்கள் ஷாக்


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US