துணிவு அல்லது வாரிசு முதலில் பார்க்கப்போகும் படம் எது?- ஜி.பி.முத்து கொடுத்த பதில்
துணிவு Vs வாரிசு
விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் பற்றிய பேச்சு தான் இப்போது தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. முன்னணி நடிகர்களான இவர்கள் படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக ஒரே நாளில் வெளியாக கடும் போட்டியில் உள்ளது.
இரண்டு படங்களின் வியாபாரமும் சூடு பிடிக்க நடக்கிறது.
இன்று மாலை விஜய்யின் வாரிசு பட 3வது பாடலும் வெளியாக ரசிகர்கள் பாடலை கொண்டாடி வருகிறார்கள்.
ஜி.பி.முத்து பதில்
பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டு பாதியிலேயே வெளியேறிய ஜி.பி.முத்துவிடம் அண்மையில் ஓரு பேட்டியில், வாரிசு அல்லது துணிவு எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்தது எனக்கு பிடித்திருந்தது. எனவே முதலில் தான் அஜித்தின் துணிவு படத்தை தான் பார்ப்பேன், அதன்பிறகு விஜய்யின் வாரிசு படத்தை காண்பேன் என பதில் கூறியுள்ளார்.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
