தற்போது தமிழ்நாட்டின் ட்ரெண்டிங்காக இருப்பது வாரிசு மற்றும் துணிவு தான். பொங்கலுக்கு எந்த படத்தை முதலில் பாப்பிங்க? என ஜீவியிடம் கேட்ட கேள்விக்கு ஜீவா வித்தியாசமாக பதில் அளித்துள்ளார்.
வாரிசு vs துணிவு
விஜய் மற்றும் வம்சி கூட்டணியில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவிருக்கும் திரைப்படம் தான் வாரிசு. ராஷ்மிகா நாயகியாக நடிக்க சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். விரைவில் வாரிசு 2ம் சிங்கிள் வரும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
மறுபுறம் துணிவு படம் அஜித் மற்றும் வினோத்தின் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம். நேர்கொண்டப் பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் உருவாகும் துணிவு திரைப்படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருப்பதாக தகவல்கள் வருகின்றது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வர பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு வாரிசு படத்துடன் ரிலீஸ் ஆக உள்ளது.
வாரிசா, துணிவா? - ஜீவா சொன்ன பதில்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஜீவாவிடம் "பொங்கலுக்கு வாரிசா? துணிவா? - இதில் எந்த படத்தை முதலில் பாப்பிங்க" என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு பதில் அளித்த ஜீவா, "முதலில் எந்த படத்துக்கு டிக்கெட் கிடக்கிதோ அந்த படத்துக்கு போவேன்" என்று பதில் அளித்தார்.
அப்போதும் விடாத செய்தியாளர்கள். "ஒரே நேரத்தில் இரண்டு படத்துக்கும் டிக்கெட் கிடைத்துவிட்டது. அப்போது என்ன செய்விர்கள்" என கேட்க, "நீங்க எதை பாப்பீங்க" என நிருபரை திருப்பி கேட்க, அவர் எந்த பதிலும் சொல்லவில்லை.
"விஜய், அஜித் இரண்டு பேருமே பெரிய நடிகர்கள் அவர்களை பார்த்து தான் வளர்ந்து வருகிறோம், அதனால் அவர்களின் இரண்டு படத்தையும் பார்ப்பேன்" என்று கூறி சமாளித்தார் ஜீவா.
கட்டா குஸ்தி விமர்சனம்! படம் எப்படி இருக்கு?