Exclusive: OTT-ல் வருகிறது குடும்பங்கள் கொண்டாடிய வாரிசு..ரிலிஸ் தேதி இதோ
வாரிசு
வாரிசு தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த படம். இப்படம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
திரும்பிய இடமெல்லாம் குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் அலை மோதினர்.

தமிழகத்தில் இப்படம் ரூ 145 கோடிகள் வரை வசூல் செய்து விஜய் படங்களிலேயே அதிகம் வசூல் செய்த விஜய் படமாக வந்துள்ளது.
அதோடு ரூ 77 கோடி வரை ஷேர் தமிழகத்தில் மட்டுமே வர எல்லோருக்கும் இந்த படம் ஜாக்பாட் தான்.
மேலும் உலகம் முழுவதும் வாரிசு வெள்ளித்திரையில் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
Sun Nxt-ல் வெளிவருகிறது
இப்படம் தற்போது Sun Nxt OTT தளத்தில் வருகிற பிப்ரவரி 22-ம் தேதி முதல் வெளிவருகிறது என்னும் exclusive தகவல் கசிந்துள்ளது.
திரையில் கொண்டாடிய வாரிசை உலகமெங்கும் உள்ள தளபதி ரசிகர்கள் Sun Nxt தளத்திலும் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் என்னும் செய்தி தளபதி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri