இதற்குள்ளே விஜய்யின் வாரிசு திரைப்படம் இத்தனை கோடி வசூலை பெற்றதா?- அதிரடியாக நடந்த வியாபாரம்
விஜய்யின் வாரிசு
தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் படு மாஸாக தயாராகி வரும் திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரிக்க இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.
குடும்பம், செட்டிமென்ட் கலந்து இந்த வாரிசு திரைப்படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுவார்கள், பாடல்கள் அனைத்தும் செம மாஸாக வந்துள்ளது. விஜய்யின் நடனத்தை ரசிகர்கள் அமர்ந்த பார்க்க போவதில்லை அவ்வளவு மாஸாக இருக்கப்போகிறது என படக்குழு கூறுகின்றனர்.
படப்பிடிப்பு தளத்தில் அண்மையில் விஜய் தில் ராஜு அவர்களின் மகனுடன் எடுத்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
பட வியாபாரம்
இப்போது படத்தின் வியாபாரம் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அதாவது தெலுங்கு பதிப்பிற்கான ரைட்ஸ் இன்னும் வியாபாரம் நடக்கவில்லையாம். தமிழுக்காக நடந்த வியாபாரத்தில் மட்டுமே படம் ரூ. 280 கோடி வரை வசூலித்துவிட்டதாம்.
பிக்பாஸ் 6 மூலம் அசல் கோளாறு வாங்கிய முழு சம்பளம்- இத்தனை லட்சமா?