திடீரென மாற்றப்பட்ட வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி.. எப்போது தெரியுமா
வாரிசு
விஜய் நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் திரைப்படம் வாரிசு.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் முடிந்துள்ள நிலையில், இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகிறது.
வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி தான் வெளியாகும் என தகவல் வெளியானது. ஏறக்குறைய இது உறுதியானது என்று தெரியவந்தது.
ரிலீஸ் தேதி மாற்றமா
இந்நிலையில், தற்போது திடீரென ரசிகர்களை குழப்பும் வகையில் நடிகை ராஷ்மிகா தகவல் ஒன்று கூறியுள்ளார். அதாவது வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என அண்மையில் இன்ஸ்டாகிராம் லைவில் கூறியுள்ளார்.
இதனால் படம் 12ம் தேதி வெளியாகிறதா அல்லது 11ம் தேதி வெளியாகிறதா என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர். தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அழகிய புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி அஜித்.. இதோ பாருங்க

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
