முக்கிய இடத்தில் துணிவை விட அதிக வசூல் செய்த வாரிசு.. ஆனால்
வாரிசு - துணிவு
வருகிற 2023 பொங்கலுக்கு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு இரு திரைப்படங்களும் வெளியாகிறது.
வீரம் - ஜில்லா படங்களின் மோதலுக்கு பின் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் - அஜித் படங்கள் ஒன்றாக வெளியாகவுள்ளது.
இதனை ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன் வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களின் புக்கிங் UK-வில் துவங்கியது.
UK வசூல்
இந்நிலையில், இந்த ப்ரீ புக்கிங்கில் வாரிசு திரைப்படம் 66 ஷோக்கள் போடப்பட்டுள்ள நிலையில் சுமார் ரூ. 14 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாம்.
அதே போல் 36 ஷோக்கள் மட்டுமே போடப்பட்டுள்ள துணிவு திரைப்படம் ரூ. 5 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு படத்தை விட குறைந்த ஷோக்கள் கிடைத்ததால் மட்டுமே வசூல் குறைவாக வந்துள்ளது என்றும், இரு படங்களுக்கும் சமமான ஷோக்கள் கிடைத்திருந்தால் சமமான வசூல் வந்திருக்கும் என்கிறது திரை வட்டாரம்.
அவதார் : தி வே ஆஃப் வாட்டர் திரைவிமர்சனம்