சென்னையில் 2000 ரூபாய்யை தாண்டும் வாரிசு, துணிவு டிக்கெட் விலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
துணிவு - வாரிசு
துணிவு மற்றும் வாரிசு இரு திரைப்படங்களும் வருகிற 11ம் தேதி வெளியாகிறது. இந்த இரண்டு படங்களின் ப்ரீ புக்கிங் கடந்த சனிக்கிழமை துவங்கியது.

சென்னையில் பெரும்பாலான திரையரங்கங்களில் நேற்றில் இருந்து டிக்கெட் புக்கிங் துவங்கப்பட்டது.
டிக்கெட் விலை
இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபலமான திரையரங்குகளில் வாரிசு மற்றும் துணிவு இரு திரைப்படங்களின் டிக்கெட் விலை 2000 ரூபாய்யை தாண்டி விற்கப்படுகிறது.
அதே போல் பிளாக்கில் அதைவிட அதிகமான விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் பலர் கடுப்பாகியுள்ளனர்.

இந்த மாதிரி அதிகமான கட்டணம் வசூலிக்கும் திரையரங்கங்கள் மீது அரசாங்கம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார்கள்.
துணிவு படத்தை பார்த்த ஷாலினி, போனி கபூர், உதயநிதி ஸ்டாலின்.. ரிசல்ட் இதுதான்