'வாரிசு vs துணிவு'.. வெளிநாட்டு பிரீமியர் ஷோ முன்பதிவில் முதலிடம் பிடித்த படம் இதுதான்
வாரிசு vs துணிவு
வாரிசு மற்றும் துணிவு படங்கள் இரண்டு வரும் பொங்கல் பண்டிகைக்கு நேரடியாக மோத இருக்கின்றன. இரண்டு படங்களுக்கும் தியேட்டர் பகிர்வில் இப்போது பிரச்சனை தொடங்கி இருக்கிறது.
விஜய் தான் பெரிய ஸ்டார், அதனால் அவர் நடித்துள்ள வாரிசு படத்திற்கு தான் அதிகம் தியேட்டர் கொடுக்கவேண்டும் என தயாரிப்பாளர் தில் ராஜு கேட்டிருந்தார். அது சர்ச்சையாக தற்போது பல தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் பதில் கொடுத்து வருகிறார்கள்.

பிரிமியர் காட்சி முன்பதிவு.. யார் முன்னிலை?
இதெல்லாம் ஒருபுறம் இருக்க வெளிநாட்டில் இந்த இரண்டு படங்களும் வரும் ஜனவரி 12ம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு பிரிமியர் காட்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
UKவில் வாரிசு, துணிவு இரண்டு படங்களுக்கும் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு வாரிசுக்கு தான் அதிகம் காட்சிகள் போடப்பட்டு இருக்கிறது. மொத்தம் 71 இடங்களில் 98 காட்சிகள் போடப்பட இருக்கிறது. தற்போது வரை 2400 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாம்.
ஆனால் துணிவு படத்திற்கு 41 இடங்களில் 41 ஷோக்கள் உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. அங்கு இதுவரை 470 டிக்கெட்டுகள் விற்பனை ஆகி இருக்கிறதாம்.

எலிமினேஷனில் பெரிய ட்விஸ்ட்.. யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர் சற்றுமுன் வெளியேற்றம்