வாரிசு ட்ரைலர் vs துணிவு ட்ரைலர்.. இதிலும் மோதலா? லேட்டஸ்ட் அப்டேட்
துணிவு படத்தின் ட்ரைலர் வரும் டிசம்பர் 31ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த நாளை துணிவு டே என அறிவித்து இருக்கும் தயாரிப்பாளர், அந்த நாளில் உலகம் முழுவதும் பல இடங்களில் துணிவு படத்தின் ப்ரோமோஷன் நடக்கும் என தெரிவித்து இருக்கின்றனர்.
துணிவு ட்ரெய்லருக்காக ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கும் இந்த நிலையில் தற்போது வாரிசு படத்தின் ட்ரைலர் எப்போது ரிலீஸ் என்கிற விவரமும் வெளியாகி இருக்கிறது.

ட்ரெய்லர் ரிலீஸில் மோதல்
இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிசில் நேரடியாக மோத இருக்கின்றன. ஆனால் தற்போது அதற்கு முன்பே புத்தாண்டு அன்று ட்ரைலர் ரிலீஸிலும் மோதல் நடைபெற இருக்கிறது.
வாரிசு படத்தின் ட்ரைலரை ஆந்திராவில் 31ம் தேதி ஒரு பெரிய விழா நடத்தி அதில் வெளியிட தயாரிப்பாளர் தில் ராஜு தயாராகி வருகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.
https://www.youtube.com/watch?v=Fb_UCHT_tlI
விஸ்வாசம் படத்தின் அதே கிளைமாக்ஸ் காட்சி வாரிசு படத்திலும் இருக்கா! ஆனால்..