பிரபாஸ் ஹிந்தி நடிகையுடன் காதல்.. உண்மையை போட்டுடைத்த நடிகர்
பிரபாஸ்
நடிகர் பிரபாஸுக்கு தற்போது 43 வயதாகிறது. அவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முயற்சித்தாலும் அவர் சினிமாவில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறார். பாகுபலி படத்தில் நடிப்பதற்காக அவர் கிட்டத்தட்ட 5 வருடங்களை ஒதுக்கிய நிலையில், அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி காதலித்து வருகிறார்கள் என முன்பு கிசுகிசுக்கள் வந்தாலும் அதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
அதன் பின் தற்போது பிரபாஸ் ஹிந்தி நடிகை க்ரித்தி சனோன் உடன் காதலில் இருப்பதாக கிசுகிசு தொடங்கி இருக்கிறது. பிரபாஸை திருமணம் செய்ய விரும்புவதாக நடிகை பேட்டியில் சொன்னதும் வைரல் ஆனது.

உண்மையை போட்டுடைத்த வருண் தவான்
சமீபத்தில் வருண் தவான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த நிலையில் அவர் க்ரித்தி சனோன் காதல் பற்றி கூறி இருக்கிறார்.
"க்ரித்தி சனோன் சிங்கிள் இல்லை. அவர் பெயர் ஒரு ஆணின் இதயத்தில் எழுதப்பட்டு விட்டது. அவர் தற்போது தீபிகா படுகோன் உடன் ஷூட்டிங்கில் இருக்கிறார்" என தெரிவித்து இருக்கிறார்.
தற்போது பிரபாஸ் தான் தீபிகா உடன் ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார். அதனால் தற்போது பிரபாஸ் - க்ரித்தி சனோன் காதல் இதன் மூலம் உறுதியாகி இருக்கிறது.

கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் காதல் திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படம்