நட்சத்திர ஜோடி வருண்-லாவண்யாவிற்கு குழந்தை பிறந்தது... பிரபலம் வெளியிட்ட போட்டோ
வருண் லாவண்யா
நட்சத்திர ஜோடிகள் எப்போதுமே ரசிகர்களிடம் ஸ்பெஷல் தான்.
அப்படி கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து நிஜ வாழ்க்கையில் இணைந்தவர்கள் தான் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி. வருண் தேஜ் தெலுங்கு சினிமா கொண்டாடும் மெகா குடும்பத்தில் ஒருவர்.

சன் டிவி மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் கானின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?... போட்டோவுடன் இதோ
தெலுங்கு படங்களில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
லாவண்யா திரிபாதி, அந்தால ராட்சசி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார், தமிழில் சசிகுமார் ஜோடியாக பிரம்மன் என்ற படத்தில் நடித்திருந்தார், தெலுங்கில் அதிக படங்கள் நடித்துள்ளார்.
குழந்தை
இருவரும் படங்களில் ஒன்றாக இணைந்து நடித்ததன் மூலம் காதல் ஏற்பட குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
ஒரு கியூட்டான புகைப்படத்துடன் சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்கள்.
இந்த நிலையில் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது, மகனின் புகைப்படத்துடன் இந்த தகவலை வருண் தேஜ் அறிவித்துள்ளார்.