பிரபலங்கள் வருண் தேஜ், லாவண்யாவின் நிச்சயதார்த்தம் எப்போது?- வெளிவந்த தகவல்
நடிகை லாவண்யா திரிபாதி
தமிழ் சினிமாவில் சசிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "பிரம்மன்", இதில் கதாநாயகியாக அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி.
இவர் தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக "தணல்" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் "அண்டாலா ரக்ஷனி" திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார், அதன் பின் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
திருமணம்
இவர் பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜாவை காதலிப்பதாக தகவல் வந்தது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் "அந்தாரிக்ஷம்" மற்றும் "மிஸ்டர்".
"அந்தாரிக்ஷம்" படத்தின் படப்பிடிப்பு சமயத்திலிருந்து இருவரும் காதலிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் லாவண்யா திரிபாதி - வருண் தேஜாவுக்கும் ஜூன் 9ம் தேதி அன்று ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.
இதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்துள்ளது. மேலும், இவர்களின் திருமணம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
அவர்கள் நிச்சயதார்த்த அழைப்பிதழ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகர் வருண் தேஜ் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
90களில் கனவுக் கன்னியாக இருந்த நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
