சீரியல்களில் இருந்து விலகியது குறித்து அழுதபடி கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை- இதோ அவரது வீடியோ பதிவு
சன் தொலைக்காட்சியில் சித்தி 2 சீரியல் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கியது.
ராதிகா வெளியேறிய பிறகு சீரியல் கதை டிராக் மாற்றப்பட்டு இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதேபோல் விஜய்யில் காற்றுக்கென்ன வேலி சீரியல் இளைஞர்களிடம் நல்ல ஹிட்டடித்துள்ளது.
இந்த இரண்டு சீரியல்களிலும் நல்ல முக்கியமான வேடத்தில் நடித்து வந்தவர் வீணா வெங்கடேஷ். தற்போது இரண்டு தொடர்களிலும் இவருக்கு பதிலாக வேறு நடிகைகளை கமிட் செய்துள்ளனர்.
காரணம் வீணாவிற்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது, அவர் குணமாகி வந்துவிடுவார் என சீரியலில் அவரது கதாபாத்திரத்திற்கு கேப் விட்டுள்ளனர்.
ஆனால் சீரியல் குழுவினர் கொடுத்த நேரத்திற்குள் அவரால் குணமாகி வர முடியவில்லையாம். எனவே இரண்டு சீரியல்களில் இருந்து தான் வெளியேறிவிட்டதாகவும், தனது கனவு எல்லாம் சிதைந்துவிட்டதாகவும் அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.