9 நாட்களில் வீர தீர சூரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
வீர தீர சூரன்
வீர தீர சூரன் படத்தின் வசூல் விவரத்தை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 9 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க.
இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில், சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி சென்ற வாரம் வெளிவந்த திரைப்படம் வீர தீர சூரன் பாகம் 2. இப்படத்தை HR பிக்சர்ஸ் தயாரித்திருந்தனர்.
துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா மற்றும் சுராஜ் வில்லன்களாக நடித்திருந்தனர். ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
வசூல்
ஒரு பக்கம் கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட வசூல் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இந்த நிலையில் 9 நாட்களில் வீர தீர சூரன் திரைப்படம் உலகளவில் ரூ. 56 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.