விக்ரமின் வீர தீர சூரன் பட இயக்குனர் அருண்குமார் வேதனையான பதிவு.. என்ன ஆனது?
வீர தீர சூரன்
தமிழ் சினிமாவில் பண்ணையாரும் பத்மினியும், சிந்துபாத், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றிக்கண்டவர் அருண்குமார்.
இவரது இயக்கத்தில் அண்மையில் விக்ரம்-துஷாரா விஜயன் நடிக்க வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி இருந்தது.
கடந்த மார்ச் 27ம் தேதி சில பிரச்சனைகளுக்கு பிறகு வெளியானது. படம் வெளியாகி இதுவரை இந்தியளவில் ரூ. 28.50 கோடி வசூலை பெற உலகளவில் படம் ரூ. 52 கோடி வசூலை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குனர் வருத்தம்
இந்த நிலையில் இயக்குனர் அருண்குமார், திரையரங்கில் படம் ஆரம்பித்த பிறகு படத்தின் காட்சிகளை செல்போனில் படம் பிடிப்பது, ஸ்டேடஸ் வைப்பது, இடையில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, படம் ஆரம்பித்த பிறகு டார்ச் அடித்துக் கொண்டு சீட்டை தேடுவது போன்ற செயல்கள் அதிருப்தி அளிக்கிறது.
மக்கள் படத்தை உன்னிப்பாக கவனித்தால் தான் கதையோட்டம் புரியும், இதுபோன்ற இடையூறுகள் காட்சிகளின் ரசனையை குறைக்கும் என வேதனையாக பேசியுள்ளார்.