வீர தீர சூரன் படம் எப்படி இருக்கு தெரியுமா? வெளிவந்த முதல் விமர்சனம்
வீர தீர சூரன்
வருகிற 27ம் தேதி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் வீர தீர சூரன் படம் வெளியாகிறது. சித்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார்.
வித்தியாசமான முயற்சியாக இப்படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகிறது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து முதல் முறையாக இளம் நடிகை துஷாரா விஜயன் நடித்து வருகிறார். மேலும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மலையாள நடிகர் சுராஜ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து அனைவரையும் மிரள வைத்தது. எந்த ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பும், அப்படம் குறித்து முதல் விமர்சனம் வெளிவரும்.
படத்தை பார்த்த திரையுலகை சேர்ந்த முக்கிய புள்ளிகள், தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வார்கள். அது படத்திற்கு இன்னும் அதிக வரவேற்பை ஏற்படும்.
முதல் விமர்சனம்
அந்த வகையில், தயாரிப்பாளர் அருண் விஜய் தனது எக்ஸ் தளத்தில், வீர தீர சூரன் திரைப்படம் குறித்து பாசிட்டிவான விமர்சனத்தை கூறியுள்ளார். இதில் "Remember the name S U Arunkumar! Not a promotional tweet" என குறிப்பிட்டுள்ளார்.
இவருடைய இந்த முதல் விமர்சனத்தின் மூலம் வீர தீர சூரன் படம் தரமாக வந்துள்ளது என தெரிகிறது. கண்டிப்பாக வரும் 27ம் தேதி சீயான் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது.
Remember the name S U Arunkumar!
— arun Viswa (@iamarunviswa) March 24, 2025
*Not a promotional tweet*

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri

ஸ்டோர் ரூமில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் - நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் நடந்த அதிர்ச்சி! IBC Tamilnadu

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri
