வீர தீர சூரன் படத்தின் ப்ரீ புக்கிங் பாக்ஸ் ஆபிஸ்.. வசூல் எவ்வளவு தெரியுமா
வீர தீர சூரன்
சித்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வீர தீர சூரன் பார்ட் 2. இப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சுராஜ் ஆகியோர் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகிறது.
ப்ரீ புக்கிங்
சமீபத்தில் வெளிவந்த வீர தீர சூரன் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில், வீர தீர சூரன் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் பட்டையை கிளப்பி வருகிறது.
ஆம், கடந்த இரண்டு நாட்களாக ப்ரீ புக்கிங் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை ரூ. 90 லட்சம் வசூல் செய்துள்ளது. மேலும் இப்படத்தின் முதல் நாள் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan
