வீர தீர சூரன் படம் ரிலீஸ் ஆக நடிகர் விக்ரம் இத்தனை கோடி கொடுத்தாரா?.. என்ன ஆச்சு?
வீர தீர சூரன்
முன்பெல்லாம் ஒரு படம் எடுக்க தான் கஷ்டம், ஆனால் இப்போதெல்லாம் ரிலீஸ் ஆவது பெரிய பிரச்சனையாக உள்ளது.
கடந்த மார்ச் 27ம் தேதி ரூ. 50 முதல் ரூ. 55 கோடி பட்ஜெட்டில் தயாரான படம் வீர தீர சூரன். சித்தா பட புகழ் அருண்குமார் இயக்கிய இப்படத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மார்ச் 27 காலை வெளியாகும் என பார்த்தால் சில பண பிரச்சனையால் மாலை தான் வெளியானது.
விக்ரம் காரணமா
வீர தீர சூரன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹெச் ஆர் பிக்சர்ஸுக்கு நிதியுதவி வழங்கிய பி4யு நிறுவனத்திற்கு ஓடிடி உரிமம் விற்கப்படாமலேயே படத்தை வெளியிடுவதாக அந்நிறுவனம் (பி4யு) டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனால் படம் திட்டமிட்டப்படி ரிலீஸ் ஆகாமல் பிரச்சனையை சந்தித்தது.
பின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பி4யு நிறுவனம் இருவரும் ஒரு பேச்சு வார்த்தைக்கு வந்து ரூ. 3.30 கோடி வரை தாங்கள் என கூற தயாரிப்பாளர் என்னால் ரூ. 1 கோடி மட்டும் தான் கொடுக்க முடியும் என கூறியுள்ளனர்.
பின் விக்ரம் படம் ரிலீஸ் ஆகியே ஆக வேண்டும் என்பதால் அவர் நான் மீதமுள்ள ரூ. 2.5 கோடியை தான் தருகிறேன் என கூற பிரச்சனை முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.