விக்ரமின் வீர தீர சூரன் எப்போது ரிலீஸ்.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தங்கலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வீர தீர சூரன்
தங்கலான் படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வீர தீர சூரன். இப்படத்தை இயக்குநர் அருண் குமார் இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து நேற்று முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளிவரும் என எதிர்பார்த்த நிலையில், ரிலீஸ் தள்ளிப்போய்விட்டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்த தகவலில், இப்படம் ஜனவரி 30ஆம் தேதி ரிலீஸாகும் என கூறினார்கள். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரவில்லை.
லேட்டஸ்ட் தகவல்
இந்த நிலையில், லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால், இதுவும் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. படத்தின் ரிலீஸ் குறித்து விரைவில் படக்குழு அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
