வீர தீர சூரன் படத்தின் இறுதி வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க
வீர தீர சூரன்
2025ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு இதுவரை சிறப்பாக அமைந்துள்ளது. குடும்பஸ்தன், மதகஜராஜா, சப்தம், வீர தீர சூரன், குட் பேட் அக்லி, டிராகன் என இந்த ஆண்டின் துவக்கமே பட்டையை கிளப்பியுள்ளது.
இதில் சியான் விக்ரம் நடிப்பில் அருண் குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் வீர தீர சூரன் பார்ட் 2. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பல பிரச்சனைகளை கடந்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி வசூல்
இந்த நிலையில், 2025ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ள வீர தீர சூரன் படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் செய்த இறுதி வசூல் ரூ. 70 கோடி ஆகும். ஆம், இதுவே இப்படத்தின் மொத்த வசூலாகும்.