வீர தீர சூரன் பாகம் -2 திரைவிமர்சனம்
சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் HR Pictures தயாரிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் வீர தீர சூரன் திரைப்படம். ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
காவல் துறை அதிகாரியாக இருக்கும் எஸ்.ஜே. சூர்யா தனது பழைய பகையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என ரவி மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் என்கவுண்டர் செய்ய வேண்டும் என திட்டமிடுகிறார்.
பெரிய தாதாவாக இருக்கும் ரவி தனது மகன் கண்ணனை எப்படியாவது எஸ்.ஜே. சூர்யாவுடன் இருந்து காற்றுவதற்காக, விக்ரமின் துணையை நாடுகிறார். விக்ரமை வைத்து போலீஸ் எஸ்.ஜே. சூர்யாவை கொன்றுவிட்டால் தனது மகனை காப்பாற்றி விடலாம் என எண்ணி இந்த உதவியை விக்ரமிடம் கேட்க, அவரும் ஒத்துக்கொள்கிறார்.
இதன்பின் என்ன நடந்தது? ஏன் விக்ரம் இதற்காக ஒத்துக்கொண்டார்? எஸ்.ஜே. சூர்யா ஏன் ரவி மற்றும் கண்ணனை கொள்ள வேண்டும் என நினைக்கிறார்? இவர்கள் அனைவருடைய பின்னணி என்ன? பல ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு இடையே நடந்த சம்பவம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் விக்ரமின் நடிப்பை பற்றி என்ன சொல்வது, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் சிறந்த நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தும் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர். எமோஷனல் காட்சியாக இருந்தாலும் சரி, ஆக்ஷன் காட்சியாக இருந்தாலும் சரி மிரட்டியெடுத்துள்ளார்.
குறிப்பாக போலீஸ் ஸ்டேஷனில் வரும் பெரியவரை கொலை செய்யும் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் வெறித்தனமாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க தனது ரசிகர்களுக்காகவே இதை சிறப்பாக செய்துள்ளார்.
கதாநாயகியாக வரும் துஷாரா விஜயன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். விக்ரமை கட்டுப்படுத்தும் ஒரே ஆளாக, தனது கணவருக்கு ஆபத்து என்றால் எதிர்த்து நிற்கும் பெண்ணாக பட்டையை கிளப்பியுள்ளார்.
எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் வழக்கமான தனது பாணியில் அல்லாமல் சற்றே வித்தியாசமாக நடித்துள்ளார். இவருடைய டைமிங் எல்லாம் வேற லெவல் என்று தான் சொல்லவேண்டும். தனக்கு சாதகமாக ஒரு காரியம் ஆகவேண்டும் என்றால் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என என்னும் கதாபாத்திரத்தை சிறப்பாக திரையில் வழங்கியுள்ளார். அதற்கு பாராட்டு.
தமிழ் சினிமாவிற்கு புது வரவாக வந்துள்ள சுராஜ் நல் வரவாகவே அமைந்துள்ளார். மலையாளத்தில் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்த இவருக்கு முதல் தமிழ் படமே நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இன்னும் கூட ஸ்கோப் இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. இவர்களை தவிர்த்து படத்தில் நடித்த அனைவரும் திரைக்கதையோடு ஒன்றி போகிறார்கள்.
இயக்குநர் அருண்குமார் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை அருமையாக திரைக்கதையில் வடிவமைத்து திரையில் சியான் ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்துள்ளார். என்ன ஒரே ஒரு விஷயம் என்றால், அதை இன்னும் கூட சுவாரஸ்யமாக கூறியிருக்கலாம். சியான் விக்ரமிற்கு இன்னும் கூட மாஸ் சீன்கள் வைத்திருந்தால் படம் இன்னும் ஒருபடி மேலே உயர்ந்திருக்கும். மற்றபடி படத்தில் மைனஸ் பாயிண்ட் என்று எதுவும் இல்லை.
படத்தின் மிகப்பெரிய பலமே, ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு தான். குறிப்பாக ஒளிப்பதிவு படத்தை மிரட்டலாக காட்டியுள்ளது. கிளைமாக்ஸ் காட்சிகள் படக்குழுவினர் சொன்னது போலவே சிங்கிள் ஷாட் பட்டையை கிளப்பியுள்ளனர்.
பிளஸ் பாயிண்ட்
விக்ரம் நடிப்பு
துஷாரா, எஸ்.ஜே.சூர்யா மற்றும் சுராஜ் நடிப்பு
சண்டை காட்சிகள்
இரண்டாம் பாதி
சிங்கிள் ஷாட் காட்சி
கிளைமாக்ஸ்
மைனஸ் பாயிண்ட்
திரைக்கதையை இன்னும் கூட சுவாரஸ்யமாக அமைத்திருக்கலாம்