வீர தீர சூரன் படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா
வீர தீர சூரன்
விக்ரம் நடிப்பில் இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வீர தீர சூரன் இரண்டாம் பாகம். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சுராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை இரட்டிப்பு ஆக்கியுள்ளது. ராவான ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
வருகிற 27ம் தேதி வெளிவரவிருக்கும் இப்படம் கண்டிப்பாக சீயான் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
ப்ரீ புக்கிங் வசூல்
இந்த நிலையில், வீர தீர சூரன் திரைப்படம் ப்ரீ புக்கிங் நேற்றில் இருந்து துவங்கியுள்ளது. இதில் இதுவரை இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 30 லட்சத்திற்கும் மேல் வசூலை வீர தீர சூரன் அள்ளியுள்ளது.

சவுக்கு சங்கர் வீட்டில் சாக்கடை நீரையும் மலத்தையும் வீசிய நபர்கள்; யாருடைய தூண்டுதல்? கொதித்த அண்ணாமலை IBC Tamilnadu

மர்மமான முறையில் இறந்த 3 பெண்கள்: அதிர்ச்சியூட்டும் கூற்றுகளை முன்வைக்கும் குடும்பத்தினர் News Lankasri

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி.., தற்போது ஆட்சியராக நியமனம் News Lankasri
