இதுவரை ப்ரீ புக்கிங்கில் வீர தீர சூரன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
வீர தீர சூரன்
வரும் 27ம் தேதி பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கும் வீர தீர சூரன் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் களைகட்டி வருகிறது.
விக்ரம் நடிப்பில் இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை HR Pictures தயாரித்துள்ளனர். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன் நடித்துள்ளார். ராயன் படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் இப்படம் வெளிவரவுள்ளது.
மேலும் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா மற்றும் மலையாள நடிகர் சுராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். மக்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் கண்டிப்பாக வசூலில் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.
வசூல்
இந்த நிலையில், வீர தீர சூரன் திரைப்படம் உலகளவில் ப்ரீ புக்கிங்கில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை நடந்துள்ள ப்ரீ புக்கிங்கில் ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி.., தற்போது ஆட்சியராக நியமனம் News Lankasri
