ரிலீஸுக்கு முன்பே கோடிகளை வசூல் செய்த விக்ரமின் வீர தீர சூரன்.. வேற லெவல்
வீர தீர சூரன்
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த தங்கலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. யதார்த்தமான நடிப்பில் அனைவரையும் மிரட்டியிருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வீர தீர சூரன். இப்படத்தை இயக்குனர் அருண் குமார் இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
ரிலீஸுக்கு முன்பே வசூல் வேட்டை
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தை வெளியிடவுள்ளனர். இந்த நிலையில், வீர தீர சூரன் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பல கோடி வசூலை அள்ளியுள்ளது.
ஆம், இதுவரை நடந்த ப்ரீ பிசினஸில் மட்டுமே ரூ. 110 கோடி முதல் ரூ. 120 கோடி வசூல் செய்திருக்கும் என கூறுகின்றனர். இதில் சாட்டிலைட் உரிமை ரூ. 60 கோடிக்கும், திரையரங்க உரிமை ரூ. 21 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.