வீரம் படத்தில் அஜித்துடன் நடித்த குட்டி பாப்பா-வா இது..! இப்போ எப்படி இருக்கிறார் என்று பாருங்க
சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முதலில் தல அஜித் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் வீரம்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து தமன்னா, சந்தானம், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரகள் நடித்திருந்தனர்.
2014ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றிபெற்றது.
இந்த வெற்றிக்கூட்டணியை தொடர்ந்து, மீண்டும் மீண்டும் சிறுத்தை சிவா மற்றும் அஜித் இணைந்து பணிபுரிய துவங்கினர்.
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான், குழந்தை நட்சத்திர நடிகை யுவினா பார்த்தவி.
இவர் தமிழில் வெளிவந்த ஸ்ட்ராபெரி, சர்கார், மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமான நடிகை யுவினா பார்த்தவியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக் என்று தான் கூறவேண்டும். ஏனென்றால், குழந்தை நட்சத்திர நடிகையாக பார்த்த யுவினா தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்த்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..