காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மற்றும் வீரன் படங்கள் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
காதர் பாட்சா வசூல்
ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.
மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மோசமான வசூலை பெற்று வருகிறது. முதல் மூன்று நாட்களில் ஓரளவு நல்ல வசூலை எட்டிய இப்படம், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் அடிவாங்க துவங்கியுள்ளது.
இந்நிலையில், இதுவரை காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் ரூ. 5.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.
வீரம் வசூல்
அதே நாளில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வீரன். இப்படத்தை மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியிருந்தார்.
இப்படம் முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இதுவரை வீரன் திரைப்படம் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் வசூல் அதிகரிக்கும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சிவாங்கி ஃபைனல் போனது எப்படி? சொம்பு தூக்குறோமா.. CWC சர்ச்சைக்கு வெங்கடேஷ் பட் கொடுத்த பதில்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
