4 நாள் முடிவில் ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல விசேஷம் படம் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
ஆர்.ஜே.பாலாஜி வானொலியில் பணியாற்றி வந்த இவர் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். LKG படத்தில் நாயகனாக நடித்த இவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தை நயன்தாரா வைத்து இயக்கினார்.
அப்படத்தை முடித்த கையோடு ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நடித்துள்ள திரைப்படம் வீட்ல விசேஷம். இப்பட ஃபஸ்ட் லுக் முதல் நாளே பல சர்ச்சைகள் கிளம்பின, படத்திற்கு சிலர் பிரச்சனையும் செய்தார்கள்.
ஆனால் வெற்றிகரமாக படம் வெளியாகி 4 நாட்கள் ஓடிவிட்டது, நல்ல வசூலையும் எட்டி வருகிறது.
இப்பட புரொமோஷனுக்காக இவர்கள் சீரியலில் நடித்து புரொமோட் செய்தது எல்லாம் புதிய விஷயம்.
மொத்த வசூல்
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படம் 4 நாள் முடிவில் ரூ. 6.5 கோடி வரை வசூலித்துள்ளது. நேற்று திங்கட்கிழமையிலும் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.
ரூ. 350 கோடியை தாண்டி விக்ரம் படம் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்- முழு விவரம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

காதலிக்கு வேறொரு நபருடன் திருமணம் - மண்டபத்திற்கு சென்று தீ குளித்த காதலன் உயிரிழப்பு..! IBC Tamilnadu
