ஆதி குணசேகரனாக எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வேல ராமமூர்த்தி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா..
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.
இவருடைய மறைவுக்குப்பின் வேறு யார் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
வேல ராமமூர்த்தி
இந்த லிஸ்டில் பல நடிகர்களின் பெயர் வந்தாலும், முதலில் வேல ராமமூர்த்தி தான் ஆதி குணசேகரனாக நடிக்க போகிறார் என தகவல் வெளிவந்தது.
ஆனால், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை முதலில் வேல ராமமூர்த்தி மறுத்தார். படக்குழு பேச்சு வார்த்தை நடத்தியபின் ஆதி குணசேகரனாக நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
இன்றில் இருந்து ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடித்த காட்சிகள் எதிர்நீச்சல் சீரியலில் ஒளிபரப்பாகவுள்ளது.
சம்பளம்
ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு நடிகர் மாரிமுத்து ரூ. 20,000 சம்பளமாக வாங்கி வந்துள்ளார்.
ஆனால், தற்போது அதே கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு நடிகர் வேல ராமமூர்த்தி ரூ. 40,000 சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
