எதிர்நீச்சல் 2: ஆதி குணசேகரன் ரோலில் நடிக்க வேல ராமமூர்த்தி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
வேல ராமமூர்த்தி
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் வில்லனாக நடித்து வருபவர் நடிகர் வேல ராமமூர்த்தி.
இவர் வெள்ளித்திரையில் வெளிவந்த கிடாரி, அப்பா, தொண்டன், ஒரு நொடி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகரை தாண்டி இவர் மிகவும் பிரபலமான எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து வில்லனாக நடித்து வந்த நிலையில், அவருடைய மரணத்திற்கு பின் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆனார் வேல ராமமூர்த்தி.
இந்த சீரியல் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் வில்லனாக இவர் செய்யும் கொடுமை அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது.
சம்பளம்
இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க நடிகர் வேல ராமமூர்த்தி வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அவரது கால்ஷீட்டை பொறுத்து ஒரு வாரத்திற்கு ரூ. 10 முதல் ரூ. 15 லட்சம் வரை சம்பளம் பெறுவதாக தகவல் தெரிவிக்கின்றன.