எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து நடித்த குணசேகரன் வேடத்தில் நடிக்கும் வேல ராமமூர்த்தி வாங்கும் சம்பளம்- எவ்வளவு தெரியுமா?
எதிர்நீச்சல் சீரியல்
ஆணாதிக்கம், பெண் அடிமை செய்யும் மக்களிடம் இருந்து எதிர்நீச்சல் அடித்து மேலே வர வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல்.
திருச்செல்வம் அவர்கள் இயக்க நாம் பார்த்து பரீட்சயப்பட்ட நடிகர்கள் நடிக்க சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.
இப்போது கதையில் தேர்தல் விஷயங்கள் பரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. சாருபாலாவுக்கு எதிராக தனது மனைவியை குணசேகரன் நிற்க வைக்க இப்போது அதுவே பிரச்சனையாக அவருக்கு முடிந்துள்ளது.

மழை தண்ணீரில் Chemical கழிவுகளை கலந்த விஷமிகள்- கண்டுபிடித்த விஜய் மக்கள் இயக்கத்தினர், வைரல் வீடியோ
திடீரென சாருபாலா தேர்தலில் இருந்து பின்வாங்க மனைவி ஈஸ்வரியையும் வாபஸ் வாங்க கூறிவிட்டு அவர் தேர்தலில் நிற்க முடிவு எடுக்கிறார். இப்போது ஈஸ்வரி தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று கூற கடும் கோபத்திற்கு ஆளாகிறார் குணசேகரன்.
இன்று வந்த புரொமோவில் குணசேகரனுக்கு எதிராக உட்கார்ந்து பேட்டி கொடுக்கிறார் ஈஸ்வரி. இதனால் கோபமான குணசேகரன் அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்புகிறார்.
வேல ராமமூர்த்தி சம்பளம்
இந்த கதையில் பெரிய ரீச் பெற்ற கதாபாத்திரம் மாரிமுத்து அவர்களின் குணசேகரன் வேடம் தான். அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க அவருக்கு பதில் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.
குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க வேல ராமமூர்த்தி மாதத்திற்கு ரூ. 10ல் இருந்து ரூ. 15 லட்சம் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
