பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் வேல ராமமூர்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி
தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ரோலில் நடித்து வருகிறார் வேல ராமமூர்த்தி. அந்த தொடரில் முதலில் நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்த நிலையில், அந்த ரோலுக்கு சரியாக இருக்கும் என வேல ராமமூர்த்தியை தேர்வு செய்து நடிக்க வைத்து வருகின்றனர்.
நேற்று வேல ராமமூர்த்தியின் பிறந்தநாள் என்பதால் அதை எதிர்நீச்சல் சீரியல் டீம் கொண்டாடியது. அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கும் போட்டோக்களும் வெளியாகி இருந்தது.
காத்திருந்த அதிர்ச்சி
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு தனக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்ததாக வேல ராமமூர்த்தி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில் தன் பெயரை பயன்படுத்தி யாரோ பொய்யான சமூக வலைதள கணக்கு தொடங்கி அதன் மூலமாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றி இருப்பது தெரியவந்திருப்பதாகவும், அவர்களை என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும் எனவும் கூறி இருக்கிறார்.