பாதுகாப்பு இல்லாத சீரியல் படப்பிடிப்பு- கொரோனாவால் உயிரிழந்த சீரியல் நடிகையின் அம்மா, சோக செய்தி
கடந்த மே 10ம் தேதியில் இருந்து முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அதை பின்பற்றுவது போல் தெரியவில்லை.
எப்போதும போல வாகனங்கள் எல்லாம் ஓடுகின்றன, மக்கள் சாதாரணமாக வெளியே சுற்றுகிறார்கள்.
இதனால அரசு இன்று முதல் கடுமையாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் தான் லாக் டவுனிலும் சீரியல் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதனால் ஒரு சீரியல் படப்பிடிப்பில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் வேலம்மாள் சீரியலில் நடிக்கும் நடிகை ரம்யா கடும் துக்கத்தில் இருக்கிறார். படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அதற்குள் தொற்று அவரது அம்மாவிற்கும் வந்துள்ளது. அவரது அம்மா கொரோனா தொற்றால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து ரம்யாவிடம் கேட்டால் இப்போதைக்கு பேசும் நிலையில் நான் இல்லை என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து சீரியல் படப்பிடிப்புகள் நடந்தால் தொற்று அதிகமாக பரவும் என்கின்றனர்.
மகளிர் உலகக்கோப்பை - இந்தியா வெற்றிபெற்றால் மாபெரும் பரிசுதொகையை அறிவிக்க உள்ள பிசிசிஐ News Lankasri
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri