பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும்.. தவாக தலைவர் அதிரடி பேச்சு
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் களமிறங்கிய நிலையில், முதல் வாரம் முடிவதற்குள், நந்தினி வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

இதன்பின் எலிமினேஷன் இருக்காது என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்ற பிரவீன் காந்தி முதல் வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 9ன் இரண்டாவது வாரம் தொடங்கியுள்ளது.

[YYDVE6U
தடை செய்யவேண்டும்
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என தமிழக சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் (தவாக) தலைவருமான வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது: "பிக் பாஸ், சண்டை, குரோதம், ஆபாசம், பொய், துரோகம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளின் களமாகவே இருக்கிறது. இவை எதுவும் தமிழ் சமூகத்தின் பாரம்பரிய அடையாளங்கள் அல்ல. குறிப்பாக தமிழக குடும்பத்தின் அன்பு, அரவணைப்பு, விட்டுக்கொடுத்தல் ஆகிய விழுமியங்களை அழிக்கும் இந்த நிகழ்ச்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri