நீங்க முஸ்லீம் தானே.. இப்படி ஏன் பண்றீங்க: விமர்சித்தவருக்கு பாரதி கண்ணம்மா வில்லி வெண்பா கோபமான பதிலடி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. சமீப காலமாக இந்த சீரியலுக்கு ரேட்டிங் குறைந்த அளவே கிடைத்து வருகிறது. வில்லி வெண்பாவின் கதாப்பாத்திரம் டம்மி ஆக்கப்பட்டது தான் ரேட்டிங் குறைய காரணம் என்கிற கருத்தும் நிலவி வருகிறது.
இந்நிலையில் வெண்பா ரோலில் நடித்து வரும் ஃபரினா ஆசாத் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் பேசும்போது விரைவில் பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து சீரியலை முடிக்க சொல்வதாக கூறி இருந்தார்.
மேலும் நெட்டிசன் ஒருவர் ஃபரினாவிடம் "நீங்க முஸ்லீம் தானே? நீங்கள் செய்வது haram" என விமர்சித்து இருக்கிறார். அதற்கு பதிலடி கொடுத்த அவர் "சமூக வலைத்தளத்தில் இருப்பது, டிவி சீரியல் பார்ப்பது, ஒரு பிரபலத்தை பின்தொடர்ந்து, அவரிடம் இப்படி கேள்வி கேட்பது தான் முதலில் haram லிஸ்டில் வரும்" என கூறி இருக்கிறார்.